குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டி எடுப்பு : டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்த மருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்த மருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர். இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததன் காரணமாக அந்த வீட்டில் தங்கியிருந்த 15 பேர் உயிழரிந்தனர். இந்நிலையில் சில சந்தேகத்தின் அடிப்படையில், சடலங்களை மரபணு பகுப்பாய்வு செய்ய அம்பாறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இவற்றில் சில சடலங்கள் நீதிபதி அசங்க ஹெட்டிவத்த முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன.