விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு 50 வாரம் சிறை : ஜாமீன் நிபந்தனை மீறல் - லண்டன் நீதிமன்றம் அதிரடி

உலக நாடுகள் மற்றும் உலக தலைவர்கள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு 50 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-01 23:20 GMT
கடந்த 2010 ஆம் ஆண்டு, விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே மீது சுவீடனை சேர்ந்த இரு பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கில், அவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு  ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவர், அங்குள்ள ஈக்குவாடார் தூதரக அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். அவரை  நாடுகடத்துமாறு சுவீடன் அரசு கேட்ட நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை ஈகுவாடார் அரசு திரும்பப் பெற்றது. இதனால், ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கைதாக  அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வார சிறை தண்டனை விதித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க ராணுவ ரகசியத்தை வெளியிட்டது தொடர்பாக அவர் மீதான மற்றொரு வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்