எச்ஐவி நோயாளி - ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் குணம் : இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழு சாதனை

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

Update: 2019-03-07 22:54 GMT
கடந்த 2003-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த ஒருவரை எச்ஐவி கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்று நோய் தாக்கியது. புற்றுநோய்க்காக அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எச்ஐவி பாதிப்பில் இருந்த மீட்க ஸ்டெம்செல் சிகிச்சை அளிப்பது என லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியரும், விஞ்ஞானியுமான இந்திய வம்சாவளி ரவீந்திர குப்தா தலைமையிலான குழு முடிவு செய்தது. இதற்காக எச்.ஐ.வி. பாதிக்காத ஒருவரிடம் இருந்து ஸ்டெம் செல் தானம் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து எச்.ஐ.வி. நோயாளிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.  ஸ்டெம் செல் மாற்று  சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. தாக்கிய நோயாளிக்கு நிவாரணம் தேடித்தந்திருப்பது, உலகிலேயே இது இரண்டாவது முறை. 10 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியை நகரை சேர்ந்த தீமொத்தி பிரவுன் என்பவருக்கு உலகிலேயே முதல் முறையாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்