கரடிக்கு ஐ -போனை தூக்கி போட்ட சுற்றுலா பயணி...
வன உயிரியல் பூங்காவில் கரடிக்கு ஆப்பிள் பழத்தை போடுவதற்கு பதிலாக சுற்றுலா பயணி ஒருவர், விலை உயர்ந்த ஆப்பிள் ஐ - போனை தூக்கி போட்ட ஒரு விநோத சம்பவம் , சீனாவில் நிகழ்ந்துள்ளது.
ஆப்பிள் - கேரட் என சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவுகளுக்கு மத்தியில் ஒரு நாள், இந்த கரடிக்கு, ஒரு "ஐ - போன்" கிடைத்தது. கவனக்குறைவாக ஆப்பிள் பழத்தை தூக்கி போடுவதற்கு பதிலாக ஆப்பிள் ஐ - போனை ஒரு சுற்றுலா பயணி, தூக்கி போட்டு விட்டார். இந்த விநோத சம்பவம், கிழக்கு சீனாவின் JIANGSU மாகாணம் YANCHENG என்ற வன உயிரியல் பூங்காவில் நிகழ்ந்தது. ஐ - போன் சாப்பிடும் பொருளா? என தெரியாமல் முதலில் தவித்த கரடி, பின்னர் வாயில் கவ்விக்கொண்டு, ஓட்டம் பிடித்தது. துரிதமாக செயல்பட்ட வன உயிரியல் பூங்கா ஊழியர்கள், கரடியிடம் இருந்து விலை உயர்ந்த ஐ - போனை பத்திரமாக மீட்டனர்.