சாலைகளை மறித்து நிறுத்தப்பட்ட லாரிகள் : உதவிப்பொருட்களை அரசே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மற்ற நாடுகளின் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராத வண்ணம், கொலம்பியா எல்லையில் அமைந்துள்ள இணைப்பு பாலத்தில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளை வெனிசுலா அரசு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-02-07 21:47 GMT
வெனிசுலாவில், கடும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உணவு மற்றும் முக்கிய மருந்து பொருட்களை அனுப்பி வருகிறது. ஆனால் வெனிசுலாவில் உணவுத் தட்டுப்பாட்டை அடியோடு மறுக்கும் அந்நாட்டு அதிபர் மதுரோ, வெனிசுலா மக்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், அவற்றை நாட்டுக்குள் விடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதற்கேற்ப எல்லையில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மிக மோசமான ஆட்சி நடத்தி வருவதாக மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்