அமெரிக்காவில் மீண்டும் எச்1பி விசா சிறப்பு பரிசீலனை
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் 'எச்-1 பி' விசா, சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் 'எச்-1 பி' விசா, சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் 'எச்-1 பி' விசா பிராசசிங் நடைமுறை மீண்டும் நாளை தொடங்குவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 65 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த 'எச்-1 பி' விசாவில் 70 சதவீதத்தை இந்தியர்களே பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.