வரலாறு காணாத சுட்டெரிக்கும் கோடை வெயில் - குளிர்ச்சியான இடங்களுக்கு மக்கள் படையெடுப்பு
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத விதமாக சூரியன் சுட்டெரித்து வருவதால், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத விதமாக சூரியன் சுட்டெரித்து வருவதால், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத விதமாக அங்கு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அதிக பட்சமாக 120 பாரன்ஹீட் வெப்பம் அங்கு பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் உக்கிரத்தை சமாளிக்க அங்குள்ள மக்கள், கடற்கரை மற்றும் செயற்கை பனி சறுக்கு மையம் போன்ற குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.