தகவலை பாதுகாக்கத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் : பேஸ்புக் முதலிடம்
தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில், மக்களிடம் நம்பகத்தன்மை குறைந்த நிறுவனமாக பேஸ்புக் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில், மக்களிடம் நம்பகத்தன்மை குறைந்த நிறுவனமாக பேஸ்புக் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் , தங்களின் தகவல்களை பாதுகாப்பதில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லை என 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிவிட்டர், அமேசான் நிறுவனங்கள் மீது தலா 8 சதவீதம் பேர் நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டுள்னர். உபெர் நிறுவனத்தின் மீது 7 சதவீதம் பேரும், கூகுள் மீது 6 சதவீத நபர்களும், ஆப்பிள், ஸ்நாப்சாட் நிறுவனங்கள் மீது தலா 4 சதவீதம் பேரும் நம்பிக்கை இல்லை என கூறியுள்ளனர். மிகக் குறைந்த அளவாக நெட்பிளிக்ஸ், டெஸ்லா நிறுவனங்கள் மீது 1 சதவீதம் பேர் நம்பிக்கையில்லை என்கிற கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.