இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய இளைஞர்கள்

இந்தியாவின் ஒப்பந்த நிறுவனத்தால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் அடிப்படை வசதிகளின்றி சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-11-28 11:08 GMT
தொழில் பெற்று தருவதாக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டு, இளைஞர்களுக்கு தொழில் வழங்கப்பட்ட போதிலும், கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து புகார் தெரிவித்துள்ள இந்திய இளைஞர்கள் விரைவில் தங்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்