ராஜபக்சே தோல்வி : ரணில் விக்ரமசிங்கே வெற்றி

இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Update: 2018-11-14 13:27 GMT
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 
அப்போது, தீர்மானத்தை ஒட்டெடுப்புக்கு விட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே வெளிநடப்பு செய்தார். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில், ராஜபக்சேவுக்கு எதிராக 122 பேர் வாக்களித்தனர். எனவே,.ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றதால், இலங்கை அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்