உறை பனி தரையில் சறுக்கி விளையாடும் 95 வயது முதியவர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 95 வயதான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" என்ற நடனமாடி அசத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 95 வயதான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், தொடர்ந்து 20 ஆண்டுகளாக உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" என்ற நடனமாடி அசத்தி வருகிறார். ராபெட் சுவீட் என்ற இவரின் மனைவி இந்த நடனத்தில் கைதேர்ந்தவர். தனது மனைவியின் நடன ஈடுபாட்டை அறிந்துகொள்ள விரும்பிய இவர், இந்த நடனத்தை பயின்றுள்ளார். தள்ளாடும் வயதிலும் தளராது நடனமாடும் ராபெட், இந்த நடனத்தின் அற்புதங்களை பட்டியலிட்டு கொண்டே செல்கிறார்.