அர்ஜென்டினாவின் தேசிய நடனம் "டேங்கோ"
தனக்கென்று ஜோடியை தேர்ந்தெடுத்து நடன அசைவுகளால் பார்வையாளர்களை வசீகரிக்க வைக்கும் "டேங்கோ" நடனம் பற்றி விரிவாக பார்க்கலாம்...
* இன்று யுனெஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த "டேங்கோ" நடனம், அர்ஜென்டினாவின் தேசிய நடனம்.ஆண்-பெண் ஜோடி சேர்ந்து ஆடும் டாங்கோ நடனத்தில் ஒவ்வொரு அடியும் முக்கியம்.
* அதிக நுட்பத்துடன் ஜோடியோடு கைகோர்த்து ஆடப்படும் இந்த நடனத்தில் ஒவ்வொரு அசைவும் வசீகரிக்க கூடியவை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அனைவராலும் ஈர்க்கப்பட்ட இந்த நடனம் பல்வேறு இடங்களில் திருவிழா போலவே கொண்டாடப்படுகிறது.
* அதிலும் அர்ஜென்டினாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும்
உலக டேங்கோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான ஜோடிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 11 ம் தேதி தேசிய டேங்கோ தினமாக கொண்டாடப்படுகிறது.
* இந்த நடனம் புற்று நோயால் வரும் பக்க விளைவுகளை குறைக்க பெரிதும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.நரம்பு தளர்ச்சி, கைகால்களில் உணர்ச்சி மரத்துப் போதல், தாங்க முடியாத வலி, நரம்பு பாதிப்பு மற்றும் பிற ரத்த சம்பந்தப்பட்ட நோய்களும் நம்மை அண்டாமல் இருக்க உதவுகிறது,டேங்கோ நடனம்.
* நேர்மறை சிந்தனையுடன், சந்தோஷமான மன நிலையில் ஜோடியோடு ஆடப்படும் இந்த நடனத்தால் மன வலிமையும் அதிகரிக்கப்பதாக தெரிவிக்கின்றனர், ஆய்வாளர்கள்.
* இந்த ஆண்டிற்கான சர்வதேச டேங்கோ சாம்பியன்ஷிப் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிசில் நடைபெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளம் ஜோடிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்