மண்வெட்டி வடிவிலான 500 நாணயங்கள் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில், மண் வெட்டி வடிவிலான 504 பழமையான நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-16 10:26 GMT
சீனாவின் ஹெனான் மாகாணத்தில், மண் வெட்டி வடிவிலான 504 பழமையான நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 434 நாணயங்கள் எவ்வித சேதமின்றி முழுமையாக உள்ளன. இவை கிமு 771 ஆம் ஆண்டு முதல் கிமு 476 ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்தவை என அகழ்வாராய்ச்சி துறையினர் நம்புகின்றனர். மண்வெட்டி வடிவிலான நாணய புழக்கம் மூலம், இந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் விவசாய நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்