தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு - இந்திய நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்டதில், செயல்திறன் மிக்க திட்டமிடல், எதிர் விளைவுகளை கணக்கிட்டு எதிர்கொண்ட துணிச்சல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.
* தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய கால்பந்து விளையாட்டு இளம் வீரர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் இரண்டு வார போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
* குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாது. ஒருவருக்கு கூட நீச்சல் அனுபவம் இல்லை.
* குகைக்குள் சிக்கிய இளம் வீரர்களை முகத்தை மாஸ்க் உதவியுடன் மூடி, பத்திரமாக குறுகலான பாதை வழியே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
* மீட்கப்படும் முன்பு அவர்களின் பதற்றத்தை தணிக்க, அவர்களுக்கு குறைந்த அளவில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.
* ஒரு கட்டத்தில் குகைக்குள் இருந்து நீரை வெளியேற்றி வந்த பிரதான குழாய் செயலிழக்க, குகைக்குள் நீர்மட்டம் உயரத் தொடங்கியது, சுதாரித்துக் கொண்டு வெளியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு குகைக்குள் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.
* இந்திய நிறுவனமான கிரிலோஷ்கர் நிறுவனம் ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களை அனுப்பி, குகைக்குள் இருந்த நீரை வெளியேற்ற எடுத்த நடவடிக்கையும் மீட்புப் பணியில் முக்கியமாக அமைந்திருந்தது.