சிறிய நீர் மூழ்கி சாதனத்தை கொடுத்த எலான் மஸ்க் யார்?

இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வுடன் காத்திருக்கும் எலான் மஸ்க்.

Update: 2018-07-12 06:47 GMT
ஜூன் 23ம் தேதி தாய்லாந்து கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்களும்,  பயிற்சியாளரும் மீட்க பல நாடுகள் கரம் நீட்டினங்க. ஆனா, அதில அதிக கவனத்தை ஈர்த்த ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்.  உள்ள இருக்குறங்கள மீட்கனும், அதுக்கு, Balloon மாதிரி விரிய கூடிய வகைல, ஒரு நைலான் டியூபை உள்ள செலுத்தி, அத விரிய வைச்சு, ஒரு வழி அமைக்கலாம்னு யோசனை சொல்லிட்டு இருந்தவரு திடீர்னு,  சிறுவர்களை மீட்க,  8 மணி நேரத்துல, ராக்கெட் செய்ய பயன்படுத்துற பாகங்கல வைச்சு ஒரு சின்ன நீர் மூழ்கி சாதனத்தை செய்து பரிசோதனை பண்ணிடோம், இதோ எடுத்துட்டு தாய்லாந்து வரேனு, கிளம்பி வந்தார்..  ஆனா, இந்த சாதன இந்த குகைக்கு சரி வராதுனு சொல்லிடாங்க... உடனே அவர், சரி இத நீங்களே வச்சுகோங்க, இனி வர கூடிய காலங்களில் இது பயன்படலாம்னு சொல்லிடுn வந்துடார்...  இது குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்படுது.. எலான் மஸ்க்கு, தாய்லாந்து குகைல இந்த சாதனம் பயன்படாதுனு தெரியும்.. ஆனா இத வைச்சு தன்ன விளம்பர படுத்திக்க இந்த சந்தர்பத்த சரியா பயன் படுத்திடார்னு விமர்சனம் வைக்கப்படுது. இவர் ஏன் இவர விளம்பர படுத்திக்கனும்னு... காரணம் இருக்கு... இவருடைய நிறுவனங்கள ஒன்னு டெஸ்லா.. இந்த நிறுவனம் பேட்டரி கார்கள தயாரிக்குது... அதுவும், உலகத்துலயே மிக வேகமான கார், மிக பாதுகாப்பான கார் இந்த நிறுவனம் தயாரிச்ச கார் தான்... சில மாசத்துக்கு முன்னாடி கூட, டெஸ்லா காரை  செவ்வாய் கிரகத்துக்கு, இவரருடைய இன்னொரு நிறுவனமான  SPACE X  தயாரித்த ராக்கெட் மூலமா அனுப்பினார். இப்ப அந்த கார் புவிவட்ட பாதைல சுத்திட்டு இருக்கு.. ஒரு முறை சார்ஜ் பன்னினா, 500 முதல் 600 கிலோ மீட்டர் வரைக்கும் இந்த கார் போகும். இந்தியா மாதிரியான நாடுகளுக்கு இன்னும் 10 ஆண்டுகள்ல இவர் ஒரு ஆபத்பாந்தவனா கூட தெரிய வாய்ப்பு இருக்கு... காரணம்... இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிய குறைக்கனும்னா, பேட்டரி கார்கள் வந்தாகனும், CHARGING PORT வைச்சு குடுங்க, உடனே இந்தியாவுக்கு வந்துடுரனு மஸ்க் சொல்றார். இது மாதிரி உலகம் முழுதும், பட்டி தொட்டியெல்லாம், தன்ன பத்தி தெரியனும்னா, இது மாதிரி சில விஷயங்கள செஞ்சு ஆகனும்லனும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுது..

Tags:    

மேலும் செய்திகள்