உலகக்கோப்பை லீக் போட்டியை நேரில் பார்த்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா தடுமாறி விழுந்தார்

மரடோனா தடுமாறி விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது

Update: 2018-06-28 12:43 GMT
அர்ஜென்டினா-நைஜீரியா இடையே நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை லீக் போட்டியை நேரில் பார்த்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா தடுமாறி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உற்சாக மிகுதியால் ஏற்பட்ட உயர்ரத்த அழுத்தமே காரணம் என்று தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், மரடோனா தடுமாறி விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  அவர் மது அருந்தியதாலேயே தடுமாறி விழுந்தார் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மரடோனா தான் எல்லா நேரத்திலும் மதுஅருந்துவதாக வாட்ஸ்அப் மூலம் ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்