டாய்லட் பேப்பரால் வடிவமைக்கப்பட்ட திருமண உடைகள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டாய்லட் பேப்பரால் உருவாக்கப்பட்ட, திருமண ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.

Update: 2018-06-22 06:05 GMT
நியூயார்க் நகரில் ஒவ்வொரு ஆண்டும் டாய்லட்  பேப்பர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்கார போட்டி நடைபெறும். பின்ன சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதே போல், கடந்த 10 நாட்களுக்கு முன்னர், நியூயார்க் நகரில் 14வது ஆண்டு, டாய்லட் பேப்பர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திருமண ஆடை அலங்கார போட்டி தொடங்கியது. மொத்தம் ஆயிரத்து 550 பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆடை அலங்கார போட்டியில் ,  10 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில்  ரொனால்டோ க்ரூஸ் என்ற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த ஆடை, சிறந்த ஆடையாக தேர்வு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்