சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி

சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார் சீனா, ரஷ்யா அதிபர்களை மோடி சந்தித்து பேசுகிறார்.

Update: 2018-06-09 13:47 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு அமைப்பில், சீனா, கஜகஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இந்நிலையில், இந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் முழு நேர உறுப்பினரானது. 

இந்தியா இணைந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த மாநாட்டில், தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹூசைனை அவர் சந்திக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்