மனைவியுடன் அப்படி இருந்த ஆசை காதலன்.. நேரில் பார்த்து கணவர் எடுத்த அதிரடி முடிவு - காதலனின் தலையை குறிவைத்து...

Update: 2023-08-08 02:57 GMT

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ஆந்திராவில் சட்டக் கல்வி படித்துக் கொண்டிருந்தபோது, மதுரையை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டக்கல்வி முடித்த பின்னர் அந்தப் பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த இளங்கோவன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் கணவர் இளங்கோவனுக்கு தெரியவரவே பழிதீர்க்க நினைத்துள்ளார். அதன்படி, இளங்கோவன் தனக்கு பழக்கமான தேவி என்ற பெண்ணை, வழக்கு தொடர்பாக செந்தில்குமாரிடம் பழக வைத்துள்ளார். அதன்படி, தேவியை வைத்து செந்தில்குமாரை தாங்கள் இருக்கும் இடத்திற்கு இளங்கோவன் வரவழைத்துள்ளார். பின்னர் செந்தில்குமாரை காரில் கடத்திச் சென்று

கை மற்றும் தலையில் அரிவாளால் கும்பல் வெட்டியது. இதனைக் கண்ட போலீசார், விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்த செந்தில்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இளங்கோவனை கைது செய்ததுடன், தலைமறைவாக இருந்த சிக்கந்தர், ஆனந்த், சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்