கஞ்சா போதையில் கண்டக்டரை கொடூரமாக தாக்கிய இளைஞர் - ரோட்டில் இறங்கி போராடிய ஊழியர்கள்
விருத்தாச்சலத்தில் கஞ்சா போதையில் அரசு பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்யக் கோரி சக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
கஞ்சா போதையில் இருந்த இளைஞர் ஒருவர், விருத்தாச்சலம் ஸ்டேட் பாங்க் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து அதில் இருந்த தற்காலிக நடத்துநர் அருள்ராஜை கடுமையாக தாக்கினார். இதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த இளைஞரை காவல்துறையினர் அனுப்பியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோர் விருத்தாச்சலதில் இருந்து சிதம்பரம் கடலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது