கதறிய மாணவி...பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ... அரக்க ஆசிரியரை தேடி தூக்கிய போலீஸ்

Update: 2024-10-29 04:28 GMT

ஓசூர் அருகே பள்ளி மாணவியை அடித்து உதைத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஓசூரை அடுத்த எலுவப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றபோது, ஓசூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஒருவர், கீழே கிடந்த கைக்கடிகாரத்தை எடுத்து வைத்துள்ளார். அந்த கடிகாரத்தை மாணவி திருடியதாக அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை குற்றம் சாட்டியதுடன், உடற்பயிற்சி ஆசிரியர்களை அநாகரிகமாக பேசியதாகத் தெரிகிறது.

இதனால், அந்த மாணவியை உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன் கடுமையாக தாக்கினார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை அடுத்து, பாகலூர் போலீசார், உடல்கல்வி ஆசிரியர் தியாகராஜனை கைது செய்தனர்.

இதற்கிடையே, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், மாணவி படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, ஆசிரியர் தியாகராஜன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அலுவலர்களும் பள்ளிக்கு சென்று மாணவி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கைக்கடிகாரத்தை மாணவி திருடியதாக குற்றம் சுமத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்