விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு - 45 ரூல்ஸ் - அறிவுறுத்திய ஈரோடு காவல்துறை

Update: 2023-09-01 04:51 GMT

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஈரோட்டில் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், இந்து அமைப்பினர், ஈரோடு நகரில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 9 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலைகள் இருத்தல், தீ விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 5 பேர் கொண்ட சிலை பாதுகாப்பு குழு உருவாக்குதல், ஊர்வலங்களில் ஆயுதங்கள், போதை பொருட்களை பயன்படுத்த தடை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது 45 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்