ரூ.21 லட்சத்துடன் நிதி நிறுவன ஊழியர் மாயம்.. -`கடத்தலா?’ - மனைவி பரபரப்பு புகார்..
விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், சந்தா தாரர்களிடமிருந்து 21 லட்ச ரூபாய் பணத்தை வசூல் செய்து மாயமானதாக கூறப்படுகிறது. இதையறிந்து நிறுவன ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் கோவிந்தராஜன் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து பிரபாகரனை அவரது நண்பர்களும், உறவினர்களு தேடி வந்த நிலையில், பிரகாரனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக கூறிய அவரது மனைவி, தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்திருக்கிறார். விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், பிரபாகரன் பணத்துடன் வருவதை அறிந்து கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.