"விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்"

Update: 2024-06-10 15:18 GMT

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி மட்டுமல்லாமல், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது என்றும், பழைய திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்