விஜயின் அரசியல் என்ட்ரி.. வெற்றிமாறன் பரபரப்பு கருத்து

Update: 2023-11-05 16:26 GMT

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும், அனைவருக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்