"துரை அண்ணனை பேச சொல்லவா?" - இணையத்தில் தீயாய் பரவும் ஆடியோ

Update: 2024-09-19 11:56 GMT

வேலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் பெயரை கூறி பணம் கேட்ட மர்ம நபரின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குடியாத்தம் மதிமுக நகர செயலாளர் ஆட்டோ மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் எனவும், தனது கார் பழுதாகி பாதி வழியில் நிற்பதாகவும், பண உதவி கேட்டுள்ளார். மேலும், துரை அண்ணனிடம் பேசுகிறீர்களா? இருங்கள் அவருக்கு கான்பிரன்ஸ் போடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த ஆட்டோ மோகன் அருகே உள்ள கடைக்காரரிடம் போன் கொடுங்கள் என்று கூறியவுடன் போனை கட் செய்து மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளார். இதே போன்று திமுக நகர மன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் போன் செய்த மர்ம நபர், தான் உதயநிதி பிஏ பேசுகிறேன் எனவும் கூறி பணம் கேட்டுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்