விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு வந்த, கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகி காரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூட்ட நெரிசல் காரணமாக தடுத்து நிறுத்தினார். அப்போது காரை சுற்றி இருந்த, கட்சி நிர்வாகிகள் பெண் ஆய்வாளரை சாலையோரம் தள்ளிவிட்டு, அந்த காரை எடுத்து செல்ல அனுமதித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்படுகிறது.