100 ஏக்கர் பஞ்சமி நிலம் மாயம்... திருவண்ணாமலை அருகே பேரதிர்ச்சி

Update: 2024-10-05 07:13 GMT

வந்தவாசி அருகே, 100 ஏக்கர் பஞ்சமி நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அருங்குணம் கிராமத்தில் 1935ம் ஆண்டு, அப்பகுதி பட்டியலின மக்களுக்கு 100 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. பின்னாட்களில் இந்த நிலங்கள் முறைகேடான முறையில் அபகரிக்கப்பட்டது. இழந்த பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி வருவாய்த்துறையினர் மற்றும் வட்டாட்சியரிடமும் பட்டியலின மக்கள் மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. நடவடிக்கை இல்லாத நிலையில், பட்டியலின மக்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய இயக்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக நேரில் விசாரணை நடந்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் பஞ்சமி நிலம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். பட்டியலின மக்களின் பஞ்சமி நிலம் அபகரிக்கப்பட்டிருக்கும் தகவல் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்