கொடியேற்றத்துடன் தொடங்கிய - வள்ளியூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா
நெல ்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று முதல் 10 நாட்களுக்கு முருகனின் வாகன சேவை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமாக தாரகன் வதம், வருகிற 18ஆம் தேதி நடைபெற உள்ளது.