"நான் தான் ரயிலை இயக்குவேன்..!" மோதிக்கொண்ட பைலட்டுகள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்ற தகராறில் லோகோ பைலட்டுகள் இருதரப்பாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து உதய்ப்பூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்பது தொடர்பாக கோட்டா மற்றும் ஆக்ரா ரயில்வே கோட்ட ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டது. ரெயிலின் லோகோ பைலட் அறைக்குள் புகுந்த இருதரப்பு பைலட்டுகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இரயில்வே கார்டு அறை சேதமடைந்ததோடு ரயிலில் கண்ணாடிகளும் சில இடங்களில் உடைந்து விழுந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்தபோதும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் வைரலாகி உள்ளநிலையில், ஆக்ரா ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.