கடற்படை போர் மையம்.. ரெபரென்ஸ் எடுத்த ராஜ்நாத் சிங்.. விரைவில் இந்தியாவில்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மெம்பிசில் உள்ள கடற்படை போர் மையத்தை பார்வையிட்டார். தனது சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக டென்னசி சென்ற அவரிடம், கடற்படை போர் மையம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கினர். இங்குள்ள மிகப்பெரிய நீர் சுரங்கப்பாதை வசதி மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பிடோக்கள் சோதிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்நாட்டு வடிவமைப்பு மேம்பாட்டிற்காக இதேபோன்ற வசதியை நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.