காதை கிழித்த அந்த நடு இரவு சத்தம்.. சிதறிய தலையை கண்டு நடுங்கிய ஊர் - பிணமான மாமன், மச்சான்

Update: 2024-11-03 07:23 GMT

காதை கிழித்த அந்த நடு இரவு சத்தம்.. சிதறிய தலையை கண்டு நடுங்கிய ஊர் - பிணமான மாமன், மச்சான்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கல் சிறு நாகலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை தனது மச்சானான ராஜ்குமாருடன் எலவனாசூர்கோட்டை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.

எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற நிலையில், எதிரே அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ராஜ்குமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது..

இதில் இரண்டு வாகனங்களில் வந்த 4 பேரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்...

அதிலும் ராஜ்குமார் மற்றும் ஏழுமலையின் தலைச் சிதறி ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சிகள் பதைபதைக்க செய்தன..

உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஏழுமலை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் இரு உறவுகளை இழந்த குடும்பத்தினர், செய்வதறியாது அழுது புலம்பிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது...

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் வெங்கடேசன் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேருமே ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இனியாவது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர் தங்கள் அன்புக்குரியவரை இழந்த உறவினர்கள்..

தந்தி டிவி செய்திகளுக்காக உளுந்தூர்பேட்டை செய்தியாளர் ஸ்ரீபாலாஜி..

Tags:    

மேலும் செய்திகள்