புகார் கொடுக்க வந்தவரை குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்.. பரபரப்பு காட்சி
திருச்சி எஸ்.பி. அலுவலக வளாகத்தில், புகார் கொடுக்க வந்தவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். திருச்சி நாவல்பட்டில் மறைந்த விஜய் கட்சி நிர்வாகி சீனிவாசனுக்கு இரங்கல் பேனர் வைக்கப்பட்டது. அதை அகற்ற நவல்பட்டு காவல் ஆய்வாளர் நிக்சன் உத்தரவிட்டார். அதற்கு விஜய் கட்சியினர் மறுத்ததும், ஆய்வாளர் நிக்சன் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்க சென்ற அப்பகுதி சமூக ஆர்வலர் மகேந்திரனை, ஆய்வாளர் நிக்சன் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.