சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் கௌரவ தினம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், பத்மஸ்ரீ விருது பெற்ற மாசி சடையன், வடிவேல் கோபால், ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி, விமானப்படை கேப்டன் கவுரி மிஸ்ரா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்டத்தில் பழங்குடி மக்கள் பங்கு பெரிய அளவில் உள்ளது என்று கூறினார். பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்ற பெயரில் மிக பெரிய சுரண்டல் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். பழங்குடி மக்களுக்கும் அனைத்து சலுகைகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று கூறிய ஆளுநர், பழங்குடி மக்கள் அனைத்து உயர் பதவிகளுக்கும் வந்தால்தான் நாடு, வளர்ந்ததாக கருத முடியும் என்றும் கூறினார்.