திருவண்ணாமலையில், கார்த்திகைத் தீபத்தன்று, கடந்த ஆண்டை விட அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிரிவலப் பாதையில் அதிகாரிகளுடன் சென்று அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி சாதாரண உடைகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். கிரிவலப் பாதையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக கூறிய அமைச்சர், தீபத் திருவிழா முடியும் வரை திருவண்ணாமலையிலேயே தங்கியிருந்து அனைத்து பணிகளையும் பார்க்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.