பரபரப்பை கிளப்பிய அண்ணாமலையின் பதிவு... வெளியான பரபரப்பு பின்னணி

Update: 2024-08-19 17:24 GMT

ஸ்ரீபெரும்புதூர் பணியாளர் குடியிருப்பு மாநில நிதியே அதிகம் என்று, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்கு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த குடியிருப்பு கட்ட மத்திய அரசின் மானியம், 37 கோடி, பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து 498கோடி கடன்பெறப்பட்டுள்ளது' என்று அண்ணாமலை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்கு குழு அதற்கு பதில் அளித்துள்ளது. அதில், இத்திட்டத்திற்கு சிப்காட் பங்களிப்பு 171 கோடி, ஒன்றிய அரசின் ARHC மானியம் 37 கோடி, எஸ்பிஐ கடன் 498 கோடி என கூறியுள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி கடன் சிப்காட் தரப்பால் திருப்பிசெலுத்தப்படும் என்று கூறியுள்ள அந்த குழு, இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் தரப்பில் முதல் தவணை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்