தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் முக்கிய குற்றவாளியின் கை, கால் முறிவு

Update: 2024-08-27 13:51 GMT

திருவாரூர் மாவட்டம் களப்பால் கிராமத்தில், முன் பகை காரணமாக, மாரிமுத்து என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஒரு பெண் உட்பட 10 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மேலும் பலரை தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான மாதவன் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், அவரை ஆலங்காடு ரயில்வே மேம்பாலத்தில் வைத்து சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயில்வே மேம்பாலத்தில் இருந்து மாரிமுத்து கீழே குதித்திருக்கிறார். இதில், கை, கால் உடைந்து மாதவன் படுகாயமடைந்த நிலையில், அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்