கொச்சை உறவால் பிறந்த குழந்தை..கொஞ்சம் கூட யோசிக்காமல் தாய் செய்த கேவலம்..அதுக்காக இப்படியா..?

Update: 2024-10-12 08:25 GMT

வலங்கைமான், ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. இவரது கணவர் செல்வம், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காலமான நிலையில், தனது இரு குழந்தைகளுடன், அதே பகுதியைச் சேர்ந்த சமீதா பானு என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆவூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞருக்கும், சுகந்திக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுகந்திக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், சமீதா பானு, அந்த குழந்தையை, தனக்கு தெரிந்த நபருக்கு விற்றுக்கொடுப்பதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் சுகந்தியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுகந்தி, அந்தக் குழந்தையை விற்பனை செய்துள்ளார். நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா நஷீமா என்பவருக்கு அந்த குழந்தையை சமீதா பானு கொடுத்த நிலையில், அதுகுறித்து அப்பகுதி மக்கள், சைல்டு ஹெல்ப்பைனுக்கு தொடர்பு கொண்டு ​புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, போலீசிலும் புகார் அளித்தனர். இதனையடுத்து, சுகந்தி, சமீதா பானு மற்றும் ஆயிஷா நஷிமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்