டவரில் ஏறி 6 மணி நேரம் திக் திக் போராட்டம்... ரோட்டை மறித்த ஊர் மக்கள்...தொற்றிய பரபரப்பு
டவரில் ஏறி 6 மணி நேரம் திக் திக் போராட்டம்... ரோட்டை மறித்த ஊர் மக்கள்...தொற்றிய பரபரப்பு
திருவண்ணாமலை வந்தவாசி அருகே கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி 6 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... கண்டவரட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் வழியை ஜெயவேலு என்பவரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து சுவர் எழுப்பி மறித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதனால் சரத்குமார் என்ற இளைஞர் கூத்தம்பட்டு கிராமத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்... கண்டவராட்டி கிராம மக்கள் திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.