கொட்டும் மழையில் 'ஸ்ட்ரெச்சரில்' மூதாட்டி..அரசு ஹாஸ்பிடலில் நடந்த அவலம் - அதிர்ச்சி காட்சிகள்
கொட்டும் மழையில் 'ஸ்ட்ரெச்சரில்' மூதாட்டி..அரசு ஹாஸ்பிடலில் நடந்த அவலம் - அதிர்ச்சி காட்சிகள்
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேமம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரமணியை அவரது மகன், மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஸ்கேன் எடுக்க மூதாட்டியை அழைத்துச் சென்றபோது,, பணம் கட்டிய ரசீதை தந்தால் மட்டுமே ஸ்கேன் சென்டருக்குள் மூதாட்டியை அனுமதிப்போம் என பணியாளர்கள் கூறியதாகவும், அப்போது மூதாட்டி கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.