தூய்மை பணியாளர்கள் செய்யும் வேலை.. பகீர் கிளப்பும் வீடியோ

Update: 2024-08-29 13:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கையுறைகள் இன்றி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளுவதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜி.என்.டி.சாலையில் உணவு மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள், சாலையோர காய்கறி கடைகள், இறைச்சி கடைகளின் கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். இந்நிலையில், பாதுகாப்பு கவசங்களின்றி பணியாற்றுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அவலம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்