கணவர் பேச பேச அமைதியாக இருந்த ஊராட்சி மன்ற தலைவி - பொதுமக்கள் ஆத்திரம்

Update: 2024-08-15 17:20 GMT

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம்புதூர் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் கேள்விக்கு ஊராட்சி தலைவி புனிதா, எந்தவிதமான பதிலும் அளிக்காமல் பொம்மை போல் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து கேள்விகளுக்கும் ஊராட்சித் தலைவரின் கணவர் சரவணன் பதிலளித்ததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது கேள்வி கேட்ட பெண்ணிடம், தி.மு.க. நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊராட்சி தலைவியின் கணவர் தலையீட்டால், பொதுமக்கள் பலர் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே புறப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்