ஒரு மாத லிவ் இன் வாழ்க்கையில் பிரேக்?.. பேருந்தில் இளைஞர் செய்த காரியம்.. அலறிய பயணிகள்.. திருப்பூரில் பரபரப்பு
லிவ் இன் உறவில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசு பேருந்தில் கையை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரும், கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு மாதமாக திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சம்பந்தப்பட்ட பெண் சொந்த ஊருக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி சென்று இருக்கிறார். இதனை அறிந்த இளைஞர் பேருந்தினுள் ஏறி அந்த பெண் முன்பு கையை பிளேடால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அவிநாசி போலீசார் இளைஞரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.