பேருந்து பயணத்தில் கிழிந்த சட்டை.. ரூ.50 ஆயிரம் இழப்பீடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி

Update: 2024-08-30 13:48 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சிவ சண்முகவேல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்தாண்டு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட அரசு பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்து பழுதடைந்து நடுவழியில் நின்றதால், பயணிகளை சாதாரண பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இவர் பயணித்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தின் கம்பி குத்தி சட்டை கிழிந்துள்ளது. இது தொடர்பாக சிவ சண்முகவேல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான சிவ சண்முகவேல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆணைய தலைவர் பிளஸ்ட் தாகூர் வழக்கை விசாரித்து 50ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவிற்கு 10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்