போதையில் அலப்பறை செய்த தொழிலாளி.. சுத்தியலால் அடித்து கொன்ற லாரி செட் ஒனர்

Update: 2024-02-05 02:56 GMT

தூத்துக்குடியில், தொழிலாளியை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த லாரி செட் உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த தில்லை சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். பிரேம்குமார் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை சிதம்பரம் என்பவர் வேலையிலிருந்து நீக்கியுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த பிரேம்குமார் தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த தில்லை சிதம்பரம் சுத்தியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்