பையன் "இறந்துட்டாம்மா" கதறிய அப்பா..போட்டி போட்டு முந்தி விளையாடி உயிரை குடித்த தனியார் பள்ளி பஸ்
பையன் "இறந்துட்டாம்மா" கதறிய அப்பா
போட்டி போட்டு முந்தி விளையாடி
உயிரை குடித்த தனியார் பள்ளி பஸ்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தனியார் பள்ளி வாகனங்கள் போட்டி போட்டு முந்திச் சென்றதில் பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
ஆசை ஆசையாய் பெற்ற ஒற்றைப் பிள்ளையை இந்த பள்ளி வாகனத்திடம் காவு கொடுத்து விட்டு கதறுகின்றனர் பாவப்பட்ட பெற்றோர்...
திருவண்ணாமலை...ஆரணி அருகே இரும்பேடைச் சேர்ந்த அரிசி வியாபாரி சிவன் என்பவரின் 22 வயது மகன் யோகஷ்...
எத்தனையோ கனவுகளோடு காத்திருந்த இளம் ரத்தம் இதோ கேட்பாரற்று சாலையில் சிந்திக் கிடக்கிறது...
திருவண்ணாமலை...குன்னத்தூரில்
இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு கண்ணமங்கலம் நோக்கிப் புறப்பட்டுள்ளன இந்த பள்ளிப் பேருந்துகள்...
முதலில் முந்திச் செல்வது யார்?...என பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே போட்டா போட்டி...
ரோட்டை கவனிப்பதை விட யார் முந்துகிறார்கள் என்பதைப் பார்க்கத் தான் நேரம் சரியாக இருந்திருக்கிறது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு...
விளைவு... எதிரே பைக்கில் வந்த யோகஷ் மீது பள்ளி வாகனம் ஒன்று மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாய் உயிரிழந்தார்...
தன் மகனின் சடலத்தைப் பார்த்து விட்டு பதறிப்போன தந்தை விரக்தியில் தன் மனைவியிடம் "இறந்துட்டாம்மா" என்று அழுதுகொண்டே கூறியது மனதை நொறுங்கச் செய்து விட்டது...
ஒற்றை மகனையும் பறிகொடுத்து விட்டு நிற்கதியாய் நிற்கும் இந்தத் தாயின் கதறல் நெஞ்சை உலுக்குகிறது...
தனியார் பள்ளி பேருந்தில் 50 மாணவர்கள் இருந்த நிலையில், அப்படியே பேருந்தை நடுவழியில் விட்டு விட்டு தப்பி ஓடிய ஓட்டுநரைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...தவறு செய்த ஓட்டுநர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யோகஷின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...
பொறுப்புடன் செல்ல வேண்டிய பள்ளி வாகனங்களே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதன் விளைவாக வாழ வேண்டிய வயதில் பரிதாபமாய் பறிபோய் விட்டது ஒரு உயிர்...