சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை... சிக்கிய சிறுவர்கள் - திருப்பூரில் நடந்த அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, 2 சிறுமிகளை கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனிடையே, சிறுமிகள் கடத்தி வரப்பட்ட விடுதி குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுமிகளுடன் வந்த கும்பல்... விடுதிக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்நிலையில், விடுதி மேலாளர் சாமுவேலை கைது செய்திருக்கும் போலீசார், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் விடுதி செயல்பட்டது குறித்தும், குற்றச் சம்பவத்திற்கு விடுதி நிர்வாகமும் உடந்தையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.