மாற்றுத்திறனாளி மகனுடன் பேருந்தில் ஏறிய தாய்.. பாதியில் இறக்கிவிட்ட தனியார் கண்டக்டர்
திருப்பத்தூரில், தனது மாற்றுத்திறனாளி மகனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவர், இவரது மாற்றுத்திறனாளி மகனை தனியார் பேருந்தில் ஏற்றி உட்காரவைத்துள்ளார். இந்நிலையில், தாயாரையும் மகனையும், தனியார் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாயார், வீட்டிற்கு சென்று, பெட்ரோல் கேனுடன் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து பேச்சு வார்த்தை செய்த போலீசாரிடம், தனக்கு உரிய நீதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.