திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பதம் குமார் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும், அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் தான் நடிக்க இருப்பதாக அவர் கூறினார்.