திருச்செந்தூர் கோயிலில் நடந்த மாற்றம்

Update: 2024-09-26 03:23 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறநிலைத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்த கும்ப கலசங்களை பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியானது இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளை கோயில் தக்கார் அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்